தொடர் அமளி.. 4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்.!
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கடந்த 3 நாளாக ஆளும் கட்சினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் முடங்கிய நிலையில் இன்று 4வது நாள் காலையில் கூட்டத்தொடர் தொடங்கியதுமே வழக்கம் போல, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
2 மணிவரை ஒத்திவைப்பு :
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சியும், அதானி குழும விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2மணி வரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
அவைகள் முடக்கம் :
அதனை அடுத்து மத்தியம் 2 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே தொடர் அமளி காரணமாக 4வது நாளும் மக்களவை மாநிலங்களவை இரண்டும் முடங்கியது.
நாள் முழுவதும் முடக்கம் :
அதனை தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இருவரும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் நாள் முழுதுவம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து விட்டனர்.
5வது நாள் :
இதனை தொடர்ந்து நாளை 5வது நாள் நாடாளுமன்றம் தொடங்க உள்ளது. நாளையாவது முறையாக ஏதேனும் விவாதங்கள் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.