இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த பிரிட்டிஷ் நடிகர்.!
கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்பொது, இயக்குனர் ஷங்கர் கல்பாக்கத்தில் நடைபெற்று வந்த, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின் தற்போதைய ஷெட்யூலை முடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் மும்பையைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் காரெட் இப்படத்தில் தனது பகுதிகளை முடித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில், “இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு இன்று எனது இறுதி நாள். இது கடின உழைப்பு, ஆனால் ஒரு பாராட்டப்பட்ட இயக்குனர், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அற்புதமான சர்வதேச குழுவினர் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
Today is my final day of shooting for Indian 2. It’s been hard work but a fantastic experience working alongside an acclaimed director, iconic actors & an amazing international crew & cast.
Look forward to seeing the end product later this year. #Kollywood #Tamil #actorslife pic.twitter.com/U3WF1I1YOJ— Bendi G बेंडी (@BenedictGarrett) March 15, 2023
Bye, bye, Chennai!
It’s been a busy but satisfying week.
Hope to see you again soon.#Chennai #TamilNadu pic.twitter.com/z2c3qy2UiN— Bendi G बेंडी (@BenedictGarrett) March 16, 2023