பன்னீர் செல்வம் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய இபிஎஸ் கோரிக்கை!
மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்ய பழனிச்சாமி தரப்பு வலியுறுத்தி உள்ளது. ஓபிஎஸ் தரப்பு மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்குக்கு எதிராக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள வழக்கு செல்லாததாகி விட்டது, எனவே, மனோஜ் பாண்டியன் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
2022 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில், மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.