ஆளுநர் ரவிக்கு சாம்பல்.! ஆன்லைன் சூதாட்ட விவகாரம்.! பெரியார் கழகம் வினோத போராட்டம்.!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுனருக்கு சாம்பலை அனுப்பி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் பெருமளவு பணத்தை இழந்து மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்னர். இதனை தடுக்க தமிழக அரசு , தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முதலில் அவசர சட்டம் இயற்றியது.
ஆளுநர் ரவி :
அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டார் . ஆனால்,அதன் பிறகு, முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு மாத கணக்காகியும் இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். இதற்கு ஆளும்கட்சி கட்சி பல்வேறு கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சாம்பல் போராட்டம் :
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடாத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் , ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி வினோத முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.