தொடர் அமளி..நான்காவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்..!
தொடர் அமளி காரணமாக நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
நாடாளுமன்றத்தில் அமளி:
ஆளும் கட்சியினர், ராகுல் காந்தி இங்கிலாந்தில், இந்தியா பற்றி உரையாற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்கட்சியினர், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் 4-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தால் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர் அமளி :
பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாடாளுமன்றத்தில் துவங்கியதில் இருந்தே எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே தொடர் அமளி ஏற்பட்டதால் கடந்த 3 தினங்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.
அவை ஒத்திவைப்பு:
இன்று நாடாளுமன்ற மக்களவை முடங்கிய சில நிமிடங்கலேயே மாநிலங்களவையும் முடங்கியது. எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளி, ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜக போராட்டம் உள்ளிட்டவற்றால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.