பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா.? 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்.! அமைச்சர் தீவிர ஆலோசனை.!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளில் 50 மாணவர்கள் வரவில்லை என்பது குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிமாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கிவிட்டன. இந்த வாரம் திங்கள் அன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. அதே போல, 11ஆம் வகுப்பு பொது தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :
முதலில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொது தேர்வு நடைபெற்று வந்தது. அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் 11ஆம் வகுப்புகளுக்கும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பொது தேர்வு நடைபெறதொடங்கியது.
50 ஆயிரம் மாணவர்கள் :
இந்த வாரம் துவங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.51 லட்சம் மாணவர்கள் எழுத இருந்த நிலையில், 8 லட்சத்து 744 மாணவர்கள் தான் தேர்வு எழுதியுள்ளனர். சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
அமைச்சர் ஆலோசனை :
பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 50ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும், மாணவர்களை திரும்ப தேர்வெழுத வைக்கவும் , 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
மறுதேர்வு :
நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்வெழுத வராத மாணவர்கள் மற்றும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடியாக ஜூன் மாதம் மறுதேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.