அதார் விவரங்களை இந்த தேதிகளில் இலவசமாக புதுப்பிக்கலாம்.! அரசு அறிவிப்பு.!
10 ஆண்டுகளாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் ஆண்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்களின் பொதுவான தனி நபர் அடையாள அட்டையாக ஆதார் எண் அடையாள அட்டை மாறிவிட்டது. அரசு, தனியார் என பெரும்பாலும் அனைத்து வித அடையாள சோதனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாகிறது.
ஆதார் எண் :
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆதார் அடையாள எண் நடைமுறையில் வந்தது. அப்போது கைரேகை, புகைப்படம், பெயர் ,முகவரி கொண்டு எடுத்துக்கொண்டவர்கள் பலர் இன்னும் அதனை புதுப்பிக்காமல் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு முடிவு :
சிலர் மட்டுமே, புகைப்படம், கைரேகை , முகவரி , பிறந்த தேதி, பெயர் என தேவைக்கு ஏற்ப புதுப்பித்து உள்ளனர். ஆதலால், அதனை புதுப்பிக்கும் பொருட்டு அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலவசம் :
அதில், 10 ஆண்டுகளாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் மார்ச் 15 முதல் ஜூன் 14 வரையில் ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது ஆன்லைன் செயல்பாட்டுக்கு மட்டுமே என்றும், வழக்கமாக ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பித்தல், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 50 ரூபாய் கட்டணம் பெறப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.