வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு இந்தியாவில் சட்ட பயிற்சி.! பார் கவுன்சில் அனுமதி.!
வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் குறிப்பிட்ட துறைகளில் சர்வதேச சட்டதிட்டங்கள் குறித்து பயிற்சி மேற்கொள்ளலாம். – இந்திய பார் கவுன்சில்.
இந்திய பார் கவுன்சிலானது (BCI) வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்ற அமர்வின் தீர்ப்புகள் குறித்த விஷயங்களை இந்தியாவில் குறிப்பிட்ட தொழில் துறைகளில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இது இரு நமது நாட்டு சட்டதிட்டங்களோடு பரஸ்பர அடிப்படையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்ட பயிற்சி :
இதற்காக, இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான இந்திய பார் கவுன்சில் விதிகளை அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளில், “வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி துறையில் இந்தியாவில் சட்ட பயிற்சியை அனுமதிக்கிறது. சர்வதேச சட்டம், பல்வேறு சர்வதேச சட்ட சிக்கல்கள், மற்றும் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு குறித்த வழக்குகள் ஆகியவை இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களின் நலன், இந்தியாவில் சட்ட தொழில் ஆகியவை வளர இந்த உத்தரவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பரஸ்பரம் :
அதாவது இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில், இந்த திட்டமானது இந்தியா மற்றும் வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் இருக்கும் வகையில் கட்டுப்படுத்தப்படும் மற்றும் அவை ஒழுங்குபடுத்தப்படும் என்றும் பார் கவுன்சில் கூறியது.
ஏன் இந்த நடைமுறை .? :
நாட்டில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது எனவும், இந்தியாவை சர்வதேச வர்த்தக நடுவர் மையமாக மாற்றுவது குறித்த விஷயங்களை நிவர்த்தி செய்யவும் இந்த விதிகள் உதவும் எனவும், இந்த விஷயத்தில் நாம் செயல்படாமல் இருந்தால், இந்தியாவின் தொழில்முறை சட்ட திட்டம் பின்தங்கிவிடும் எனவும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து நலன்களுக்கு ஏற்ற வகையில் சட்ட விதிகளுக்கு ஏற்ப சட்ட/தொழில்முறை நிபுணத்துவத்தை வழங்க வேண்டும் எனவும், சட்ட தொழில் மற்றும் சட்டத்துறையில் வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பை உறுதி செய்வோம் எனவும் அந்த அனுமதி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.