திமுகவில் நிர்வாகிகள் 4 பேர் இடைநீக்கம் – துரைமுருகன் அறிவிப்பு
திருச்சி சிவா எம்.பி., வீடு மீதான தாக்குதல் விவகாரத்தில் 4 திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.
தலைமைக் கழக அறிவிப்பு! pic.twitter.com/D1kX5eitAt
— DMK (@arivalayam) March 15, 2023