அமைச்சரான பின் முதல் முறை இங்கு வருகை புரிந்துள்ளேன்..! குறிப்பெழுதிய உதயநிதி..!

Default Image

கலைஞரின் பிறந்த இல்லத்திற்கு சென்ற உதயநிதி 

நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த இல்லம் உள்ளது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் இன்று முதல்முறையாக கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

இவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைஞரின் பிறந்த இல்லத்தில் உள்ள கலைஞரின் தாய், தந்தை, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் விளையாட்டு துறை அமைச்சருக்கு பேட், பந்து ஆகிய உபகரணங்களை பரிசாக வழங்கினார். பின் கலைஞர் இல்ல நினைவகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20ஆம் தேதி கலைஞர் பிறந்த இல்லத்தில் முன்பு  தொடங்கி கைதானோம்.

இன்று அமைச்சராக முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணியாற்றுவோம் என்று குறிப்பெழுதி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்