வேகமாக பரவும் H3N2 வைரஸ் காய்ச்சல்..! கடுமையான மற்றும் பொதுவான நோய் அறிகுறிகள் இதோ…!

Default Image

எச்3என்2 (H3N2) வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த தொற்று ஏற்படுவதற்கான கடுமையான மற்றும் பொதுவான அறிகுறிகளை காண்போம்.

H3N2 வைரஸ் :

H3N2 வைரஸ் என்பது இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் துணை வகை ஆகும். இந்த வைரஸ் தொற்று பொதுவாக பன்றிகள் பறவைகள் மற்றும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸால் இதுவரை சுமார் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் தன்மை கொண்டது. இதனால் மரணம் ஏற்படும் வாய்ப்புகள் கூட அதிகமாகும்.

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் கடுமையான அறிகுறிகள் :

  1. இதனால் மூச்சுத் திணறல் போன்ற சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்தும், கடுமையான அல்லது தொடர்ந்து வாந்தியெடுத்தல் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் கடுமையான அறிகுறியாக இருக்கலாம்.
  2. H3N2 இன்ஃப்ளூயன்ஸா உள்ள ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அல்லது கடுமையான வாந்தி அல்லது வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டால் நீரிழப்பு ஏற்படலாம்.
  3. கடுமையான H3N2 இன்ஃப்ளூயன்ஸா உள்ள ஒருவருக்கு நீரிழப்பு அல்லது செப்சிஸ் இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் உருவாகலாம்.
  4. H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆஸ்துமா அல்லது நீரிழிவு போன்ற ஏற்கனவே இருக்கும் நாட்பட்ட நோய்களை மிகவும் மோசமாக்கும்.
  5. இந்த வைரஸால் ஏற்படும் காய்ச்சல் அல்லது மூளையில் ஏற்படும் அலர்ஜியின் விளைவாக வலிப்பு ஏற்படலாம்.

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகள் :

  1. H3N2 நோய்த்தொற்றின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று அதிக காய்ச்சலின் தொடக்கமாகும். இந்த காய்ச்சல் 3 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கும் மற்றும் 100 முதல் 104 டிகிரி வரை இருக்கலாம்.
  2. H3N2 நோய்த்தொற்றின் மற்றொரு பொதுவான அறிகுறி வறட்டு இருமல் மற்றும் தொடர்ந்து இருமல் ஆகும். இதனால் ஏற்படும் இருமல் கடுமையாகவும் வாரக்கணக்கிழும் நீடிக்கும்.
  3. மற்றொரு பொதுவான அறிகுறி தொண்டை வலி. காய்ச்சல் மற்றும் இருமலுடன் தொண்டை வலியும் ஏற்படலாம். H3N2 இன்ஃப்ளூயன்ஸா உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி இருக்கும். அவை கடுமையானதாகவும் நீண்ட காலமாகவும் இருக்கலாம்.
  4. அடிக்கடி ஏற்படும் உடல் சோர்வு, அடிக்கடி உடல் வலி மற்றும் உடல் பலவீனம் H3N2 அறிகுறிகளாகும். மற்ற அறிகுறிகள் தணிந்த பிறகும் இவை பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.
  5. H3N2 நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறி உடல் குளிர்ச்சியாக இருப்பது. இதனால் சில நேரங்களில் காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்