இதற்காகவே பிரசாந்த் கிஷோருக்கு நன்றி கூற வேண்டும் – சீமான்

Default Image

பிரசாந்த் கிஷோர் என்னிடம் நான்கு ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் என தெரியப்படுத்தியுள்ளார்

சமீபத்தில் வட இந்தியப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியான வீடியோக்கள் வெளியான நிலையில், இது பேசும் பொருளானது. இதனையடுத்து, வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு கடுமையான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வட இந்திய தொழிலாளர்கள் குறித்து  அச்சுறுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிரசாந்த் கிஷோருக்கு நன்றி

இது குறித்து சீமான் அவர்கள் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். வட இந்தியர்கள், இந்திக்காரர்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் நான் பேசினேன்.

பிரசாந்த் கிஷோர் உங்களை நான் பாராட்டுகிறேன். ரூ. 400 கோடியை வாங்கிவிட்டு திமுகவிற்கு வேலை செய்தவர் என்னிடம் நான்கு ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் என தெரியப்படுத்தியுள்ளார் இதற்காக நான் பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொல்ல வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்