அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை.! 2000 கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு நோட்டீஸ்.!
விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்ததாக 2000 பால் சங்கங்களுக்கு பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் அண்டை மாநிலங்களுக்கு விற்கப்பட கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. இதனை மீறி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் தட்டுப்பாடு :
இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2000 கூட்டுறவு சங்கங்கள் :
இதனால், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு பால் விற்றதாக எழுந்த புகாரின் பெயரில் சுமார் 2000 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு பல்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் :
அண்டை மாநிலங்களுக்கு பால் விற்றது தொடர்பான புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், விதிகளை மீறி செயல்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பால்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.