பாஜகவை தனியாக வீழ்த்த யாருக்கும் சக்தியில்லை : அமைச்சர் ஸ்மிருதி இரானி ..!
பாஜகவை தனியாக வீழ்த்த சக்தியில்லாமல், எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரள்வதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுவதாகவும் அவர் கூறினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை தனியாக எதிர்க்க வலிமை இல்லாததால் தான், எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக திரள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக-வை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓர் அணியாக திரள்வது, பிரதமர் மோடியின் பிரபலத்தை உணர்த்தும் அடையாளம் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.