காவல் நிலையத்தில் திருச்சி சிவா – அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் இடையே மோதல்..! பெண் போலீஸ் காயம்.
திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேருவின் தரப்பினர் தாக்கல் நடத்தியுள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்த திருச்சி சிவா ஆதரவாளர்கள்
திருச்சியில் டென்னிஸ் அரங்கை திறக்க எம்.பி சிவாவை அழைக்க கோரி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை மறித்தனர். இதனையடுத்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் நேருக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
எம்பி சிவா வீடு மீது தாக்குதல்
இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இதனையடுத்து, அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேருவின் தரப்பினர் தாக்கல் நடத்தியுள்ளனர்.
அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டியதாக கைது செய்யப்பட்ட திருச்சி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல் நிலையத்திற்குள் புகுந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அங்கிருந்து நாற்காலியை எடுத்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் போலீஸ் காயம்
இந்த தாக்குதலில் அங்கிருந்த பெண் போலீஸ் காயமடைந்தார். தாக்குதலை தடுத்த போது, காவலர் சாந்திக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.