ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை தொடரும்.! அமைச்சர் பெரியசாமி உறுதி.!
ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி , எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் காவல் துறை நடவடிக்கை எடுப்பார்கள். – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று கன்னியாகுமரியில் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
முதல்வர் கையில் சட்டம் :
அப்போது அவர் தமிழக சட்ட ஒழுங்கு பற்றியும் அதற்கான நடவடிக்கை பற்றியும் கூறினார். அவர் கூறுகையில், முதல்வர் கையில் சட்டம் இருக்கிறது. காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனவும்,
யாராக இருந்தாலும் நடவடிக்கை :
தமிழக சட்ட ஒழுங்கிற்கு இடையூறாக அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க சுதந்திரம் இருக்கிறது. அதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலையாது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் முழு சுதந்திரத்துடன் பணியாற்றி வருகிறார்கள் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.