பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி அறிவிப்பு..!
ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் கைரேகை பதிவு முறை காலை மாலை என இரு நேரங்களிலும் அமல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெள்ளாளபாளையத்தில் புதிய தார்ச்லை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் அவர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஆசிரியர்கள்-மாணவர்களின் நல்லுறவை மேம்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்