நிறுத்தி வைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை வெளியிட அமைச்சர் பொன்முடி உத்தரவு!
18 கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட அமைச்சர் பொன்முடி உத்தரவு.
நிறுத்திவைக்கப்பட்ட 18 தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டார். விதி மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. விடைத்தாள் மதிப்பீடு, முறையாக கணக்கு சமர்பிக்காத புகாரில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது, 18 கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். மேலும், விதிகளை மீறிய கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.