வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா..?
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “வணங்கான்”. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க படத்தை 2 டி நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வந்தார்.
இந்த நிலையில், சில காரணங்களால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி கொள்வதாகவும், மற்றபடி வணங்கான் படத்தில் வேறொரு நடிகர் நடிப்பார் என்றும் இயக்குனர் பாலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். பிறகு இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அருண் விஜய், அதர்வா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல்கள் வந்தது.
இதில் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம். ஏனென்றால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வணங்கான் கெட்டப்பில் அருண் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை.
இதனையடுத்து, வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கஉள்ள நடிகை குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷ்னி பிரகாஷ் நடிக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு ஜடா, 47 டேய்ஸ், லக்கி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.