இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு..!

Default Image

இந்தியாவில் தனிநபர் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு கடந்த 3 ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக டிராய் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2014ஆம் ஆண்டில் தனிநபரின் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு சராசரி நாள் ஒன்றுக்கு 260 MB யாக இருந்ததாகவும், தற்போது 4 ஜி.பி. அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

89 சதவீதம் பேர், செல்போன் மற்றும் டேப்கள் மூலம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. விலை குறைவான ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேகமான 4ஜி சேவை ஆகியவையே மொபைல் இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் ஒரு ஜி.பி. டேட்டாவுக்கு சராசரியாக 269 ரூபாயாக கட்டணம் இருந்ததாகவும், தற்போது ஒரு ஜி.பி.க்கு 19 ரூபாய் அல்லது அதற்கும் கீழாக கட்டணம் குறைந்து விட்டதாகவும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today
Sri lanka President Anura kumara Dissanayake