பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது!
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் எச்.ராஜா கைது.
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை காவல்துறை கைது செய்துள்ளது.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் கைது செய்யப்பட்டார். பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா வருகையை கண்டித்து திண்டிவனத்தில் விசிகவினர் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஐவித நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ராஜா கைது செய்யப்பட்டார்.