பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட ‘சீரியல் கிஸ்ஸர்’..! வெளியாகிய அதிர்ச்சி வீடியோ..!
பீகார் ஒரு இளைஞர், பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகாரில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ காட்சி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையின் வெளியே நின்று ஒரு பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் அருகே சத்தமில்லாமல் வந்து, அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளான்.
அந்த பெண் அவனிடம் இருந்து தன்னை மீட்க போராடினார். இதையடுத்து அந்த பெண் மருத்துவமனை ஊழியர்களை அழைத்தவுடன் இளைஞர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இளைஞர் வலுக்கட்டாயமாக பெண்ணை முத்தமிட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 4 ஆம் வகுப்பு சுகாதாரப் பணியாளராக பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண் ஜமுய் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை தொடங்கியது.
जमुई सदर अस्पताल में महिला स्वास्थ्य कर्मी को दिनदहाड़े युवक ने ज़बरदस्ती किस किया, CCTV में क़ैद हुई घटना. महिला की शिकायत पर FIR दर्ज, महिला सुरक्षा पर उठाये गम्भीर सवाल. pic.twitter.com/uDC2wZ3cMR
— Utkarsh Singh (@UtkarshSingh_) March 13, 2023
வலுக்கட்டாயமாக பெண்ணை முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு பெரும் சீற்றத்தைத் தூண்டியது. பீகாரில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும், குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் நெட்டிசன்கள் காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.