மாமன்னன் படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..? சூப்பர் தகவல் இதோ.!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் , வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஒரு அரசியல் த்ரில்லர் மற்றும் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சேலத்தில் 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் வடிவேலு படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கியதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால், கிட்டத்தட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மாமன்னன் திரைப்படத்தை 23 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இதுவரை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அதிகம் விற்கப்பட்ட திரைப்படம் இந்த படம் தான். இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலினின் நீண்ட கால தாமதமான கண்ணை நம்பாதே மார்ச் 17 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.