மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு – சென்னை ஐஐடி நிர்வாகம்
மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்படும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தகவல்.
சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்களுக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புஷ்பூ ஸ்ரீ சாய் என்ற மாணவன் பி.டேக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இந்த தற்கொலை குறித்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஐடி நிர்வாகம் விளக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி, 6 ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டியில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்போது மாணவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை.
விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும்
கொரோனா காலகட்டத்துக்கு பிறகு ஐஐடி மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பொருளாதாரம், குடும்ப பிரச்சனை, மன அழுத்தம் காரணமாகவே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாணவர்களுக்கும், பேராசியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் புஷ்பக் தற்கொலை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
விசாரணை குழு அமைப்பு
இந்த நிலையில், மாணவன் புஷ்பக் தற்கொலையையடுத்து, மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், மாணவர் பிரதிநிதிகள், பேராசிரியர்கள் குழுவில் இருப்பர் என்றும் சென்னை ஐஐடி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பின் கல்வித் துறை சவாலாக மாறி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.