பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 337 புள்ளிகள் குறைந்து 57,900 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 58,168 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 337 புள்ளிகள் அல்லது 0.58% என குறைந்து 57,900 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 111 புள்ளிகள் அல்லது 0.65% குறைந்து 17,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ லிமிடெட், கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், லார்சன் & டூப்ரோ, எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.