நாளை முதல் 5 நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இமாச்சலப் பிரதேசம் சிம்லா நகரில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதால், 15 நாட்களாக உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிக் குடங்களுடன் அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். குடிநீர் பஞ்சத்தால், நாளை முதல் 5 நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, ஊரே தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்த நிலையில், குடிநீர் லாரி மோதியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.