மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது..!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
130 நகரங்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். மொத்தமுள்ள 200 மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் 150 இடங்கள் ஜிப்மர் புதுச்சேரிக்கும், 50 இடங்கள் ஜிப்மர் காரைக்காலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் ஆதார்கார்டு, இ-ஆதார்கார்டு, பாஸ்போர்ட் ஆகிய அடையாள அட்டைகளில் ஒன்றைக் கொண்டுவர கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.