அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைப்பு!
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள இரு அறைகளும் சீல் வைப்பு.
ஆட்கொணர்வு மனு:
விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை கொடுமைப்படுத்தியதாகவும், பலரை காணவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரமம் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.
நிர்வாகிகள் கைது:
இதுபோன்று ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்றோர்களை கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. ஆசிரம உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த நிலையில், ஆசிரம நிர்வாகிகள் 8 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சீல் வைப்பு:
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் சீல் வைத்தார். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள இரு அறைகளும் சீல் வைக்கப்பட்டது. ஆசிரமத்திலிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, ஆசிரம நிர்வாகி ஜுபின் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.