அதிகரித்து வரும் பன்றி காய்ச்சல்.. அறிகுறிகள்.. தடுக்கும் வழிமுறைகள்..! மத்திய சுகாதாரத்துறை கூறுவது எனன.?
தற்போது இந்தியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்த பல்வேறு தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பிப்ரவரி வரையில் மொத்தம்மாக 955 H1N1 வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 545 பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளாவில் 72 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் காய்ச்சல் என பதிவாகியுள்ளன. இம்மாதம் (மார்ச்) இறுதியில் இருந்து எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்காக காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.
பன்றிக் காய்ச்சல் :
H3N2 மற்றும் H1N1 நோய்த்தொற்றுகள் இரண்டும் கோவிட்-19 போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது உலகெங்கிலும் கொடிக்கணக்கானோரை பாதித்து 68 லட்சம் பேரின் இறப்புகளுக்கு காரணமாக அமைந்தது என தரவுகள் கூறுகின்றன.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின்படி, பன்றிக்காய்ச்சல் என்பது டைப்-ஏ இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் பன்றிகளின் ஒருவித சுவாச நோயாகும். கடந்த 2009 ஆம் ஆண்டில் பன்றி காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த வைரஸ் பன்றிகள், பறவைகள் தாண்டி , மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தியது. 2009-10 காய்ச்சல் பருவத்தில், H1N1 ஆனது சுவாச பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக சுகாதார நிறுவனம் H1N1 வைரஸ் காய்ச்சல் (பன்றி காய்ச்சல்) காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது.
இதன் அறிகுறிகள் :
காய்ச்சல், குளிர் , இருமல் , தொண்டை வலி , மூக்கு நீர் ஒழுகுதல் மற்றும் சிவந்த கண்கள், உடல் வலி, தலைவலி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு. ஒவ்வாமை மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும் . இதற்கு பிறகு காய்ச்சல் அறிகுறிகள் உருவாகின்றன என மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
H1N1 வைரஸ் பரவும்/ பாதிக்கும் விவரம் :
H1N1 போன்ற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் உங்கள் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலை வரிசையாக செல்களை பாதிக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் அசுத்தமான நீர், உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய்க்கு நேரடி வைரஸ் பரவும் போது வைரஸ் உங்கள் உடலில் நுழைகிறது என்றும், பன்றி இறைச்சியை உண்பதன் மூலம் பன்றி காய்ச்சல் பரவாது என்றும் மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
பன்றி காய்ச்சல் பின்விளைவுகள் :
பன்றி காய்ச்சல் உங்கள் அன்றாட செயல்முறைகளை பாதிக்கும் மற்றும் இதய பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை மேலும் தீவிரமடைய செய்யும். இது உங்களுக்கு கடுமையான காய்ச்சலை உண்டாக்கும். சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால், இது மரணத்தை கூட ஏற்படுத்தும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை :
ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு H1N1 வைரஸ் தொற்று ஏற்பட்டால் சிறப்பு மருந்துகள் அல்லது சிகிச்சைகள் தேவையில்லை. உரிய மருந்துகள் எடுத்துக்கொண்டு நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும், நிறைய திரவங்களை பருக வேண்டும் எனவும், எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உண்ண வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், முகக்கவசம் அணிவது, தும்மும்போது அல்லது இருமும்போதும் மூக்கு மற்றும் வாயை ஒரு துணியால் மூடுவது, சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை அவ்வப்போது நன்கு கழுவது என்பது மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.