திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளி கைது!

Default Image

திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளியான சிராஜுதீன் என்பவர் கைது.

ஏடிஎம் கொள்ளை:

கடந்த மாதம் 12-ஆம் தேதி திருவண்ணாமலையில்  அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.72.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத் உள்ளிட்ட 5 பேரை காவல்துறை கைது செய்திருந்தது.

குற்றவாளிகளிடம் விசாரணை:

கைது செய்யப்பட்ட முகமது ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் உள்பட 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒருவர் கைது:

இந்த நிலையில், திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 6வது குற்றவாளியான சிராஜுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஏற்கனவே ஆசிப் ஆசாத், குதரத்பாஷா, அப்சல் உசேன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவரை காவல்துறை  செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்