குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறும் : அமைச்சர் காமராஜ் ..!
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 80அடியை எட்டும் என்றும், குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறும் என்றும் நம்பிக்கை உள்ளதாக கூறினார்.