Viral Videos : முதலையை தூக்கி எறிந்த சீற்றம் கொண்ட யானை..!
“மலைக்க” வைக்கும் மலை பாம்பு:
பார்த்தவுடன் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு பெரியதாக இருக்கும் மலை பாம்பு ஒன்று புல்வெளியில் ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Wowee! The size is incredible. ????pic.twitter.com/H26rziEyMx
— Wow Terrifying (@WowTerrifying) March 13, 2023
முதலை vs யானை :
யானை ஒன்று குளத்தின் உள்ளே நின்று தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது குளத்திலிருந்து வந்த முதலை ஒன்று யானையின் தும்பிக்கையை தனது வாலால் பிடிக்க முயன்றுள்ளது. இதனால கோபமடைந்த யானை முதலையின் வாலைத் தன் தும்பிக்கையால் பிடித்து அதனை தூக்கி எரிந்தது. முதலையை தூக்கி எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
BTS கூத்து :
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் 95வது ஆஸ்கார் விருது விழா நடைபெற்றது. அதில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ஹிட் பாடலான ‘நாட்டு நாடு’ சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த பாடலில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
This is perfect Naatu Naatu BTS edit oh my goshh ????????pic.twitter.com/1fWhTgTm3W
— Ankitaᵒᵗ⁷???????????? FACE & SMOKE SPRITE ???????? (@koyankita) March 7, 2023
தற்பொழுது இந்த பாடலை மிகவும் பிரபலமான கே-பாப் (K-pop) குழுக்களில் ஒன்றான பிடிஎஸ் (Bangtan Sonyeondan-BTS) குழு நடன பயிற்சியின் போது வெளியிட்ட வீடியோவுடன் சிங்க் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். பிடிஎஸ் குழு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டு நாட்டு பாடல் :
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்கார் விழாவில், எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின், ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த அசல் பாடலுக்கான விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இதனையடுத்து மக்கள் அனைவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது, இந்த பாடலுக்கு அமெரிக்க போலீசார் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#California cops are enjoying the the #NaatuNaatu song.???????????????? Naatu naatu is everywhere #RamCharan #NTR #RRRMovie #SSRajamouli #RRRForOscars #RRR #GlobalStarRamCharan #NTRGoesGlobal #Oscars #Oscars2023 #letsdance pic.twitter.com/rjRQMrjoTs
— nenavath Jagan (@Nenavat_Jagan) March 11, 2023
தாயின் அரவணைப்பு:
தனியாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கி குட்டியை பெண் சிங்கம் ஒன்று பாய்ந்து அதைக் கொல்ல முயன்றது. ஆனால் ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கி தனது குட்டியை பாதுகாப்பகற்காக சிங்கத்தை விரட்ட வேகமாக வந்தது. சிங்கம் உடனே தன் உயிரைக் காப்பாற்ற ஓடியது. தாய் ஒட்டகச்சிவிங்கி தனது குட்டியை பெண் சிங்கத்திடம் இருந்து காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram