தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சரியாக 10 மணி அளவில் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,88,064 மாணவர்கள் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதில், 5,835 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 125 சிறைவாசிகள் மற்றும் 5,338 தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழக்கத்தில் 3,184 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பொதுத்தேர்வு பணிக்காக 43,200 கண்காணிப்பாளர்கள், 1134 நிலை குழுக்கள், 3,100 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு நடக்கும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது.