அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பிவி ரமணா மீது வழக்குப்பதிவு.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பிவி ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. திருவள்ளுவர் நகர செயலாளர் கந்தசாமி மீதும் பொலிசிஸ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே, திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமை வகித்தார். பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500 பேர் விலகி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், பிவி ரமணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.