ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் விளையாடுவது சந்தேகம்.!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயம் காரணமாக 4வது டெஸ்டில் பேட்டிங்கில் களமிறங்காத ஷ்ரேயஸ் ஐயர், மார்ச் 17 இல் தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் ஷ்ரேயஸ் ஐயர் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பேட் செய்ய வரவில்லை, தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார்.
அங்கு அவர் தனது உடல்நிலை சோதனை பரிசோதித்துவிட்டு ஒருநாள் தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷ்ரேயஸ் எப்படியும் முதல் ஒருநாள் போட்டியை தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கணக்கில் வென்றுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் மார்ச் 17 இல் தொடங்கி மார்ச் 22வரை நடைபெறுகிறது.