சீன அதிபர் ஜி ஜின் பிங், விளாடிமிர் புதின் சந்திப்பு; வெளியான தகவல்.!
சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாக தகவல்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜின்பிங், அடுத்தவாரம் ரஷ்யா செல்லவுள்ளார். ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனா முயற்சிப்பதாக, அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3-வது முறையாக சீனாவிற்கு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினுடன் நடக்கும் சந்திப்புக்கு பிறகு, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம், புதின் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீக்கு மாஸ்கோவில் விருந்தளித்திருந்தார், இதன்மூலம் ஜின்பிங்-கிற்கு மறைமுகமாக புதின் அழைப்பு விடுத்திருந்தார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்யாவுக்கு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.