உ.பியில் பயங்கரம்.. 6 நபர்களால் 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.! தீவிர சிகிச்சையில் சிறுமிகள்…
உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கிராமத்தில் இருந்து அருகில் 5 கிமீ தொலைவில் நடந்த கண்காட்சிக்கு 17 மற்றும் 15 வயது சிறுமிகள், தங்கள் 12 வயது தங்கை, 10 வயது தம்பியுடன் சென்றுள்ளனர்.
காத்திருந்த சிறுமிகள் :
அப்போது நேரம் ஆகிவிட்டதால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி காலையில் வருவதாக வீட்டாருக்கு சொல்லி விட்டனர். கண்காட்சியில் உருவினர் வருகைக்காக காத்திருந்த சிறுமிகள், உறவினர்கள் வருவதற்கு தாமதமானதால், 2 கிமீ தொலைவில் உள்ள உறவினர் வீட்டை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை :
அப்போது 1கிமீ தூரம் கடந்ததும்,6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கி, 15 வயது மற்றும் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உடன் இருந்த சிறுவர் சிறுமி கூச்சலிட்டதால், அவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது அந்த கொடூர கும்பல்.
6 பேர் கைது :
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் 19 முதல் 24 வயது உடையவர்கள் என்றும் அவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் காவல் உயர் அதிகாரி ராஜேஷ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை :
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.