ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் -மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி க்கள் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி குறித்து எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமாக பதிலளித்திருந்தார். அதில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இதற்காக தமிழக அரசு, 5.25 ஏக்கர் நிலம் இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் அமைக்க சிறந்த கட்டடக்கலை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக முடிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும், டிஜிட்டல் கல்வெட்டுகள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.