பாஜக, காங்கிரஸ் சகோதர, சகோதரி போன்றவர்கள்- கெஜ்ரிவால்.!
பாஜகவும், காங்கிரசும் சகோதர, சகோதரிகளைப் போன்றவர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, பாஜகவும், காங்கிரசும் சகோதர, சகோதரிகளைப் போன்றவர்கள், அவர்களுக்கு இடையேயான நட்பு அனைவருக்கும் தெரியும், மாநிலத்தை கொள்ளையடித்து மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்தெரிவித்தார்.
பாஜகவும், காங்கிரசும் இணைந்து செயல்படுவதையும், மாறி மாறி ஆட்சியைப் பகிர்ந்து கொள்வதையும் டெல்லி மற்றும் பஞ்சாப் மக்கள் அறிவர் என்றும், அதனால் பொதுமக்கள் இரு கட்சிகளுக்கும் எதிராக வாக்களித்து ஆம் ஆத்மியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிஜேபி மற்றும் காங்கிரசுக்கு ஒரு நல்ல அமைப்பு உள்ளது, ஆனால் அவர்களுடன் எங்களுக்கு எந்தவொரு அமைப்பும் இல்லை, நாங்கள் பொதுமக்களுடன் உறவு வைத்திருக்கிறோம், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்க முயற்சித்ததால் பாஜக அவரை சிறையில் அடைத்தது.
டெல்லியில் பள்ளிகளை மேம்படுத்தி ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக, சிசோடியாவை சிறைக்கு அனுப்பியது என்று கெஜ்ரிவால் கூறினார். நாங்கள் பொதுமக்களுக்கு சாலைகள், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்குகிறோம்.
மக்கள் வளர்ச்சியை விரும்பினால், ஆம் ஆத்மிக்கு மாநிலத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசியலும் ஊழலும் வேண்டுமானால் மற்ற கட்சிகளுக்கு வாக்களியுங்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், மின்சாரம் வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்.
காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மக்களை கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.