மார்ச் 22இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மார்ச் 22இல் நடைபெறுகிறது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மார்ச் 22 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் மார்ச் 21 மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
வரும் ஜூன் மாதம் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நூற்றாண்டு தொடக்க விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கின்றன.