வாடிவாசல் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா..? “செம மாஸ்” அப்டேட் இதோ.!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “வாடிவாசல்”. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஜல்லிக்கட்டு கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இந்த திரைப்படம் எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த ஆண்டு நடைபெற்றது. பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்த காரணத்தால் சூர்யாவும் அடுத்ததடுத்த படங்களில் கமிட் ஆனார். இதணலே இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதனையடுத்து, வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்டாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை முடித்துவிட்டார் என்பதால் வாடிவாசலுக்கான பணியை விரவில் தொடங்கவுள்ளாராம். எனவே விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைபோல் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும், நடிகர் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு 10 மொழிகளுக்கு மேல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.