வறுமையின் காரணமாக விற்கப்பட்ட “ஆஸ்கர் விருது”.! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா..?
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுவை வாங்குவது என்பது சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் கனவு என்றே கூறலாம். அப்படி பட்ட இந்த ஆஸ்கர் விருது வறுமையின் காரணமாக விற்கப்பட்ட வியப்பான தகவல் உங்களுக்கு தெரியுமா..? அதற்கான வரலாற்று தகவல் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
அதன்படி, 1941-ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் கேன் திரைப்படத்திற்காக மறைந்த இயக்குனரும், நடிகருமான ஆர்சன் வெல்லஸ் ஆஸ்கர் விருதை வென்றார். சிறந்த அசல் திரைக்கதை என்ற பிரிவில் அவர் வென்றார். அப்போது இருந்த வறுமையின் காரணமாக ஆர்சன் வெல்லஸ் மகள் பீட்ரைஸ் வெல்லஸ் ஆஸ்கர் விருதை விற்றாராம்.
சுற்றி தங்கத்தால் செய்யப்பட்ட அந்த விருதை கிட்டத்தட்ட $861.542 இந்திய மதிப்பின் படி ரூ.7 கோடிக்கு அவர் ஆஸ்கர் விருதை விற்றுள்ளாராம். இதைப்போல இதுவரை 150 ஆஸ்கர் விருதுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நேற்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெற்றது. இதில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு ” பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவிலும், இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு சிறந்த ஆவண குறும்படம் என்ற பிரிவில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் – #Oscars2023: யார் யாருக்கு என்னென்ன ஆஸ்கர் விருது…? வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ.! ????