அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு!
மக்களவையில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டார் என புகார் கூறி அலுவல் ஆய்வு கூட்டத்தை புறக்கணித்தது திமுக.
மக்களவையில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டார் என புகார் தெரிவித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதுபோன்று காங்கிரஸ் பிரதிநிதிகளும் மக்களவை அலுவல் ஆய்வு குழு சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக நாடாளுமன்ற குழும தலைவர் டிஆர் பாலு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல என தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் உள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என்றார்.