தீயசக்தி திமுக வை வீழ்த்தியே ஆக வேண்டும் – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து டிடிவி தினகரன் அறிக்கை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் அறிக்கை
அதில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட கழகம், துரோகத்தின் கையில் சிக்குண்ட காரணத்தால் வீருகொண்டெழுந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் எழுச்சிமிகு எண்ணத்தின் வெளிப்பாடே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் நின்று தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்தல், தமிழகத்திற்கான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இதயதெய்வம் அம்மா அவர்களின் பெயரில் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் லட்சோப லட்சம் அன்பு தொண்டர்கள் மத்தியில் தொடங்கப்பட்டது.
கழகத்தின் 6ம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றியும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புரிந்தும், மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கியும் கழக ஆண்டுவிழாவினை சிறப்போடு கொண்டிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்(@ammkofficial)!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்திட சபதமேற்போம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம்! pic.twitter.com/HS42t13QSR
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 13, 2023