நீதி, வருவாய்த்துறை அதிகாரத்தை போலீஸ் பயன்படுத்த முடியாது – ஐகோர்ட்
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை.
நீதித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை போலீஸ் பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர் மீது குற்றவியல் நடுவர் கோர்ட் மட்டுமே நடவடிக்கை எடுக்கலாம். துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த அரசாணைகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை எனவும் கூறியுள்ளனர்.
மேலும், நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் துணை காவல் ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைத்து துணை ஆணையர் பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.