குடும்பத்துடன் நடிகர் அஜித்குமார்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றாலோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு சென்றாலோ அவருடைய புகைப்படங்களும். அவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட துபாயில் அஜித்குமார் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது அஜித்குமார் தனது மனைவி ஷாலினி மற்றும் தன்னுடைய மகன், மகளுடன் கால் பந்து மைதானம் ஒன்றில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் அஜித் தாடியை சேவ் செய்துகொண்டு மிகவும் ஸ்டைலான லுக்கில் இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்களும் நெட்டிசன்களும் அஜித் எப்போவும் வேற லெவல் தான் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு செல்லவுள்ளார். இந்த பயணத்திற்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.