டெல்லி பல்கலைக்கழத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்.! விசாரணை குழு அமைத்த மத்திய அரசு.!
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் மாணவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி, மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்கள் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம் :
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் , இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
ஆ.ராசா கேள்வி :
டெல்லியில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதா என திமுக எம்பி ஆ.ராசா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வ பதிலை தெரிவித்துள்ளார்.
விசாரணை குழு :
அதில், டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.