அவமானம்…இரத்தம் கொதிக்கிறது..நடிகை காயத்ரி ரகுராம் காட்டம்.!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிபட் சௌக்கில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸின் சிலையை அவமதித்ததாகக் கூறி நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். சுபாஷ் சந்திரபோஸ் சிலை மீது ஏறி அந்த நபர் அதன் அருகே புகைபிடிப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அவர் சிலையின் சுபாஷ் சந்திரபோஸ் வாயில் சிகரெட் துண்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் புகைபிடித்து, சிலையின் முகத்தில் புகையை வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து மிகவும் கோபத்துடன் தன்னுடைய கண்டங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் “என்ன அவமானம் . இரத்தம் கொதிக்கிறது. இவரை கைது செய்து பாடம் புகட்ட வேண்டும்” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
என்ன அவமானம் . இரத்தம் கொதிக்கிறது. இவரை கைது செய்து பாடம் புகட்ட வேண்டும்.
pic.twitter.com/mcmNVUqvzr— Gayathri Raguramm ???????? (@Gayatri_Raguram) March 13, 2023