தமிழகத்திலுள்ள ஆளுநர், ஆளுநரே இல்லை – டாக்.ராமதாஸ்
நினைவிடம் உள்ள இடத்திலேயே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.
பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனர். இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ராமதாஸ் பேட்டி
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டா.ராம்தாஸ், கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று உள்ளது; நினைவிடம் உள்ள இடத்திலேயே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடலில் சிலை அமைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக ஆளுநர் குறித்து பேசிய அவர், தமிழகத்திலுள்ள ஆளுநர், ஆளுநரே இல்லை, தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு கையெழுத்திடாமல் உள்ளார் என விமர்சித்துள்ளார்.