பாஜகவை வீழ்த்த.. எங்கள் கூட்டணி இவர்களோடு தான்.! பீகார் முதல்வர் பகிரங்க அறிவிப்பு.!
உத்திர பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி , அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்கும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு.
பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. நிதிஸ் குமார் முதல்வராக பொறுப்பில் இருக்கிறார். இவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணியை தற்போதே உருவாக்க அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் படி, தற்போது உத்திர பிரதேசத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கூறுகையில், உத்திர பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்தால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம் என கூறியுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் 5 லட்சம் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.